கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் அணியை வீழ்த்தி உருகுவே அரையிறுதிக்கு முன்னேற்றம்


கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் அணியை வீழ்த்தி உருகுவே அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

Image : @CopaAmerica

தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி

டெக்சாஸ்,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரேசில் - உருகுவே அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை இதனால் ஆட்டம் 0-0 என டிரா ஆனது. ஆட்டம் டிரா ஆனதால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது. இதனால் உருகுவே அணி அரையிறுதிக்கு முன்னேறியது .


Next Story