கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: கனடாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய அர்ஜெண்டினா


கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: கனடாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய அர்ஜெண்டினா
x

Image Courtesy: AFP

இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

ஜார்ஜியா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வேடார், பராகுவே, பெரு, உருகுவே, வெனிசுலா ஆகிய 10 அணிகளும்வட அமெரிக்க கண்டத்தைச்சேர்ந்த அமெரிக்கா, மெக்சிகோ, ஜமைக்கா, பனாமா, கனடா, கோஸ்டா ரிகா ஆகிய 6 அணிகளும் என மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் அர்ஜெண்டினா - கனடா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி கனடாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.


Next Story