கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி


கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி
x

Image : @CopaAmerica

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின

டெக்சாஸ்,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா - சிலி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் முதல் பாதி 0-0 என முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லவுட்டாரோ மார்டினஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது.


Next Story