பீலே, மரடோனாவுக்கு அருகில் உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு சிலை..!
மெஸ்ஸி, கையில் உலகக் கோப்பையை தாங்கி நிற்பது போல சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து அர்ஜென்டினா அணி சாம்பியன் ஆனது.
1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டினா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது.மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. உலகக்கோப்பை 2022 தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
இந்த நிலையில், உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு , தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு சார்பில் மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது . மெஸ்ஸி, கையில் உலகக் கோப்பையை தாங்கி நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார்.
மெஸ்ஸி சிலையை தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.