செல்சியா கால்பந்து கிளப்பை விற்பனை செய்ய முடிவு: உரிமையாளர் தகவல்


செல்சியா கால்பந்து கிளப்பை விற்பனை செய்ய முடிவு: உரிமையாளர் தகவல்
x
தினத்தந்தி 4 March 2022 7:46 AM IST (Updated: 4 March 2022 7:46 AM IST)
t-max-icont-min-icon

செல்சியா கால்பந்து கிளப்பை விற்பனை செய்ய முடிவு செயதுள்ளதாக அதன் உரிமையாளர் ரோமன் அப்ராமோவிச் அறிவித்துள்ளார்.


லண்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி கால்பந்து கிளப் செல்சியா ஆகும். தற்போது இந்த செல்சியா கால்பந்து கிளப் விற்பனைக்கு வர உள்ளது. இந்த தகவலை அதன் உரிமையாளரான ரஷியாவை சேர்ந்த ரோமன் அப்ராமோவிச் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, இந்த கால்பந்து கிளப்பை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு அறக்கட்டளை அமைத்து உக்ரைன் மீதான போரில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story