சூரியன் இப்போது மறைந்தாலும் மீண்டும் உதிக்கும்..! - யுஸ்வேந்திர சாஹலின் டுவீட்


சூரியன் இப்போது மறைந்தாலும் மீண்டும் உதிக்கும்..! - யுஸ்வேந்திர சாஹலின் டுவீட்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 Aug 2023 11:07 PM IST (Updated: 21 Aug 2023 11:26 PM IST)
t-max-icont-min-icon

சூரியன் இப்போது மறைந்தாலும் மீண்டும் உதிக்கும் என்பதை குறிப்பால் யுஸ்வேந்திர சாஹல் உணர்த்தியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, திலக் வர்மா, இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், அக்ஷர் படேல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். மேலும் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த அணியில் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அணியில் தேர்வாகாதது குறித்து சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில் சூரியன் மேகமூட்டத்துடன் இருக்குமாறும் பின்னர் சூரியன் பிரகாசமாக இருக்குமாறும் பதிவிட்டுள்ளார். சூரியன் மீண்டும் உதிக்கும் என்பதைதான் சஹால் மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக சாஹல், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சாஹல் அதிக விக்கெட்டுகளை (187) வீழ்த்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story