உலகக்கோப்பை தொடர்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டிக்கான தேதி மாற்றம்


உலகக்கோப்பை தொடர்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டிக்கான தேதி மாற்றம்
x

கோப்புப்படம்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டிக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, உலகக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி உட்பட 9 லீக் போட்டிகளுக்கான தேதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள மற்ற 8 லீக் போட்டிகளில் விவரங்கள் வருமாறு:-

அக்டோபர் 10 - இங்கிலாந்து - வங்காளதேசம், தர்மசாலா

அக்டோபர் 10 - பாகிஸ்தான் - இலங்கை, ஐதராபாத்

அக்டோபர் 12 - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா, லக்னோ

அக்டோபர் 13 - நியூசிலாந்து - வங்காளதேசம், சென்னை

அக்டோபர் 15 - இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான், டெல்லி

நவம்பர் 11 - ஆஸ்திரேலியா - வங்காளதேசம், புனே

நவம்பர் 11 - இங்கிலாந்து - பாகிஸ்தான், கொல்கத்தா

நவம்பர் 12 - இந்தியா - நெதர்லாந்து, பெங்களூரு


Next Story