உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்க அணி..!


உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்க அணி..!
x

image courtesy; twitter/ @ICC

தினத்தந்தி 1 Nov 2023 6:08 PM IST (Updated: 1 Nov 2023 6:12 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டி காக் மற்றும் வான் டெர் டுசென் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் புனேவில் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக பவுமா மற்றும் டி காக் களம் இறங்கினர். இதில் பவுமா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் வான் டெர் டுசென் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அபாரமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இவர்களில் முதலில் சதம் அடித்த டி காக் 114 ரன்களில் ஆட்டமிழந்தார். இது இந்த உலகக்கோப்பை தொடரில் அவரது 4-வது சதமாகும். இவர்கள் இருவரும் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 200 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென் 118 பந்துகளில் 133 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் டேவிட் மில்லர் அதிரடியில் மிரட்ட தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் குவித்துள்ளது. மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 358 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மெகா இலக்கை நோக்கி நியூசிலாந்து பேட்டிங் செய்ய உள்ளது.



Next Story