உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் படைத்துள்ள சாதனைகள்


உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் படைத்துள்ள சாதனைகள்
x

image courtesy; AFP

தினத்தந்தி 1 Nov 2023 3:22 PM GMT (Updated: 1 Nov 2023 3:24 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டி காக் 114 ரன்கள் அடித்து அசத்தினார்.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் புனேவில் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக பவுமா மற்றும் டி காக் களம் இறங்கினர். இதில் பவுமா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த டி காக் 114 (116) ரன்களும், வான் டெர் டுசென் 133 (118) ரன்களும் குவித்தனர். அவருடன் டேவிட் மில்லர் 53 (30) ரன்கள் விளாச தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் அடித்த 114 ரன்களையும் சேர்த்து இந்த உலகக்கோப்பையில் 545 ரன்களை அடித்துள்ள டி காக் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 500 ரன்கள் விளாசிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற ஜாக் காலிஸ் சாதனையையும். தகர்த்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. டி காக் : 545 ரன்கள் (2003)

2. ஜாக் காலிஸ் : 485 ரன்கள் (2007)

3. டி வில்லியர்ஸ் : 482 ரன்கள் (2015)

மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற குமார் சங்ககராவின் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் டி காக் 545 ரன்கள் அடித்துள்ள நிலையில் இதற்கு முன் 2015 உலகக்கோப்பையில் சங்ககாரா 541 ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். தற்போது அந்த சாதனையையும் டி காக் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.


Next Story