உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு...!
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

டெல்லி,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் டெல்லியில் மோத உள்ளன.

5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலும், நெதர்லாந்து அணி 4 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி மட்டும் பெற்று 2 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.


Next Story