பெண்கள் டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு


பெண்கள் டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி  பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:39 PM GMT (Updated: 23 Feb 2023 12:44 PM GMT)

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் கேப்டவுனில் இன்று அரங்கேறும் அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.


Next Story