பெண்கள் டி20 உலகக்கோப்பை: முதலாவது அரையிறுதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்..!


பெண்கள் டி20 உலகக்கோப்பை: முதலாவது அரையிறுதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்..!
x

Image Courtesy: AFP  

8-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

கேப்டவுன்,

8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலிய அணி அதே நம்பிக்கையுடன் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போர்ரிக்கு முன்னேற ஆர்வமாக உள்ளது.

அதே வேளையில் லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்த இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த நம்பிக்கையுடன் களம் இறங்க உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் மந்தனா பார்முக்கு திரும்பி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பந்து வீச்சில் ரேனுகா நம்பிக்கை அளிக்கிறார். இந்திய அணி இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்க உள்ளது.



Next Story