மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு..!


மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு..!
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது

மும்பை,

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story