பெண்கள் பிரிமீயர் லீக் : உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு


பெண்கள் பிரிமீயர் லீக் : உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்

மும்பை,.

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றன.

இதில் 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.

டெல்லி , மும்பை , உ.பி. வாரியர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் அலிசா ஹீலே தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணி மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story