பெண்கள் பிரீமியர் லீக் வெளியேற்றுதல் சுற்று: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற உ.பி வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு


பெண்கள் பிரீமியர் லீக் வெளியேற்றுதல் சுற்று: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற உ.பி வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 24 March 2023 7:17 PM IST (Updated: 24 March 2023 7:30 PM IST)
t-max-icont-min-icon

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி), மும்பை இந்தியன்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி) அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

ஆனால் ரன்-ரேட் (+1.856) அடிப்படையில் முன்னிலை வகித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-அலிசா ஹீலி தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story