பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது


பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
x

இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று காலை நடக்கிறது.

மிர்புர்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்திய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது. இதில் 154 ரன் இலக்கை கூட எட்டிப்பிடிக்க முடியாமல் இந்தியா 35.5 ஓவர்களில் 113 ரன்னில் அடங்கியது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி வங்காளதேசத்திடம் வீழ்ந்தது இதுவே முதல்முறையாகும். பேட்டிங்கில் இந்திய வீராங்கனைகள் அனைவரும் சொதப்பினர்.

இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் பேட்டிங்கில் தடுமாறும் இந்திய வீராங்கனைகள் எழுச்சி பெற்றால் தான் பதிலடி கொடுப்பதுடன் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். அதே நேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி தொடரை வெல்வதில் வங்காளதேசம் தீவிரம் காட்டும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.


Next Story