மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இலங்கை அணிக்காக சதம் அடித்த 2வது வீராங்கனை - சாதனை படைத்த விஷ்மி குணரத்ன


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இலங்கை அணிக்காக சதம் அடித்த 2வது வீராங்கனை - சாதனை படைத்த விஷ்மி குணரத்ன
x

image courtesy; @ICC

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

பெல்பாஸ்ட்,

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 260 ரன்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக விஷ்மி குணரத்ன சதம் (101 ரன்) அடித்து அசத்தினார். அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 261 என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் விஷ்மி குணரத்ன சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அதாவது இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.

இதற்கு முன் இலங்கை மகளிர் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சமாரி அத்தபத்து மட்டுமே (9 சதம்) சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story