பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 2-வது வெற்றி


பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 2-வது வெற்றி
x

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 18.2 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது.

கேப்டவுன்,

10 அணிகள் இடையிலான பெண்களுக்கான 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (பி பிரிவு) இங்கிலாந்து அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 18.2 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அலிஸ் கேப்சி அரைசதம் அடித்து ( 51 ரன், 22 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெற்றிக்கு வித்திட்டார். இங்கிலாந்துக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து இருந்தது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் வங்காளதேசம் நிர்ணயித்த 127 ரன்கள் இலக்கை, இலங்கை அணி 18.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- வங்காளதேசம் (இரவு 10.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story