மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு...இந்தியா 130 ரன்கள் சேர்ப்பு..!


மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு...இந்தியா 130 ரன்கள் சேர்ப்பு..!
x

Image Courtesy: @BCCI Women

இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 30 ரன்கள் எடுத்தார்.

மும்பை,

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நவிமும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன், ரிச்சா கோஷ் 23 ரன், வஸ்த்ரகர் 9 ரன், அமன்ஜோத் கவுர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.


Next Story