பெண்கள் ஆசிய கிரிக்கெட்: தாய்லாந்து, வங்காளதேச அணிகள் வெற்றி


பெண்கள் ஆசிய கிரிக்கெட்: தாய்லாந்து, வங்காளதேச அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 7 Oct 2022 6:23 AM IST (Updated: 7 Oct 2022 6:29 AM IST)
t-max-icont-min-icon

லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

சில்ஹெட்,

7 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 116 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை தாய்லாந்து ஒரு பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது.

குட்டி அணியான தாய்லாந்துக்கு இது மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். நேத்தகன் சேந்தாம் 61 ரன்கள் (51 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கதாநாயகியாக மின்னினார். மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம் 88 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை ஊதித்தள்ளியது.

தொடரில் இன்று பகல் 1 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணி (3 வெற்றியுடன் 6 புள்ளி) பாகிஸ்தானை (2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி) எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இருபது ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் 10-ல் இந்தியா வெற்றி கண்டிருபபது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காலை 8.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்-தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.


Next Story