மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற யு.ஏ.இ பந்துவீச்சு தேர்வு


மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற யு.ஏ.இ பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @BCCIWomen

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.

தம்புல்லா,

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா - யு.ஏ.இ அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story