மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: சமாரி அத்தபத்து தலைமையில் களம் இறங்கும் இலங்கை அணி
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சமாரி அத்தபத்து தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
8 அணிகள் இடையிலான 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், யு.ஏ.இ அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வரும் 19ம் தேதி யு.ஏ.இ - நேபாளம் அணிகள் மோத உள்ளன. அன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் கலந்து கொள்ள அனைத்து அணிகளும் இலங்கைக்கு சென்ற வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி விவரம்: சமாரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதனி, அச்சினி குலசூரிய, இனோஷி பிரியதர்ஷனி, காவ்யா கவின்தினி, சச்சினி நிசான்சலா, ஷாஷினி ஹிம்ஹானி, அமா காஞ்சனா.