மைதானத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது ஏன் ? மனம் திறந்த சுனில் நரைன்


மைதானத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது ஏன் ?  மனம் திறந்த சுனில் நரைன்
x

Image :BCCI 

மைதானத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பதிலளித்துள்ளார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. கொல்கத்தா அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடி வரும் சுனில் நரைன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் சுனில் நரைன் பேட்டிங்கில் 3 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 461 ரன்களும், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.தொடக்க வீரராகவும் சதம் அடிக்கும்போதும் , சுழற்பந்துவீச்சாளராக விக்கெட் வீழ்த்தும் போதும் நரைன் மற்ற வீரர்களை போல அதிகப்படியான உணர்வுகளை வெளிப்படுத்தியதே இல்லை

இந்த நிலையில்,மைதானத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு சுனில் நரைன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

இன்று ஒருவரை அவுட் செய்தாலும், நாளையோ அல்லது இன்னொரு நாளோ அவர்களுடன் விளையாட நேரிடும். அதனால் உங்களால் முடிந்தவரை அந்த தருணத்தை மட்டும் அனுபவிக்க வேண்டும், அதனை அதிகமாக கொண்டாடக் கூடாது என்பதை வளரும் வயதில் என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதனால்தான் மைதானத்திற்குள் நான் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த மாட்டேன்.என தெரிவித்தார்.


Next Story