இந்திய ஆடுகளம் குறித்து எந்த புகாரும் கூற மாட்டோம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓலி போப், இந்திய ஆடுகளம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லண்டனில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்திய டெஸ்ட் தொடரின் போது ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்தாலும் அது குறித்து நாங்கள் எந்தவித புகாரும் செய்ய மாட்டோம். இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் தான் ஆடுகளம் தயாரிக்கப்படுகிறது. அதுபோல் இந்தியா தங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தகுந்தபடி ஆடுகளத்தை அமைப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.