நாங்கள் எங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடுவதை விரும்புகிறோம் - பேட் கம்மின்ஸ்


நாங்கள் எங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடுவதை விரும்புகிறோம் - பேட் கம்மின்ஸ்
x

Image Courtesy: X (Twitter)

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்கள் அடித்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, கொஞ்சம் குறைவாக ரன்கள் எடுத்துவிட்டோம். வான்கடேவில் உங்களால் முடிந்த அளவுக்கு அதிக ரன்கள் எடுக்க வேண்டும். பிட்ச் கொஞ்சம் கை கொடுத்ததால் நீங்கள் எப்போதும் போட்டியில் இருக்கிறீர்கள் என்பது போல் உணர்ந்தேன்.

மேலும் 150 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்து 170 ரன்கள் எடுப்பதற்கு எங்கள் வீரர் சன்வீர் சிங் உதவினார் என்று நினைக்கிறேன். நாங்கள் எக்ஸ்ட்ரா பவுலரை கொண்டிருக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார்.

நாங்கள் எங்களுடைய சொந்த ஊரில் விளையாடுவதை விரும்புகிறோம். எனவே காத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அங்கே இன்னும் சில வாணவேடிக்கை ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story