நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி...! தென் ஆப்பிரிக்கா வீரர் நோர்ஜே
நாளை இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன .
ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புபான கட்டத்தை எட்டியுள்ளது. 2 குரூப்களாக நடைபெற்று வரும் லீக் சுற்று வரும் நவம்பர் 6ம் தேதி முடிவடையவுள்ளது. இந்த தொடரில்
இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.நாளை பெர்த்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன .
இந்நிலையில், நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக எங்களைப் பார்க்கிறோம். என தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நோர்ஜே கூறியதாவது:
நாங்கள் எங்களை நம்புகிறோம்.நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக எங்களைப் பார்க்கிறோம். நாங்கள் எங்களுடைய முழு திறமை மீது நம்பிக்கை வைத்து செல்வோம்.
நாங்கள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அணி. எங்களுடைய வேகப்பந்து வீச்சின் மூலம் பல்வேறு இடங்களை சரிசெய்வோம்.
அத்துடன் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் பெற்றுள்ளோம். நாளைய போட்டியை எங்கள் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதன்மீது கவனம் செலுத்துவோம். என தெரிவித்துள்ளார்.