இந்தியா-பாகிஸ்தான் போட்டி:"45 பந்துகளுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கோலி" அஸ்வின் பாராட்டு


இந்தியா-பாகிஸ்தான் போட்டி:45 பந்துகளுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கோலி அஸ்வின் பாராட்டு
x

'45 பந்துகளுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவ பாக்கணும்' - கோலி ஆட்டம் குறித்து அஸ்வின்பாராட்டு

சிட்னி:

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இந்த போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அபாரமாக ஆடிஅணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் புதுவரவாக இணைந்துள்ளார் மற்றொரு இந்திய வீரரான அஸ்வின். சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை எடுத்துக்காட்டாக சொல்லி கோலியின் இன்னிங்ஸை அஸ்வின் புகழ்ந்துள்ளார்.

"விராட் கோலி. அவருக்குள்ள என்ன பூந்துடுச்சுன்னே தெரியல. ஏதோ பூந்துடுச்சு சத்தியமா. அதுல ஒண்ணும் சந்தேகமே கிடையாது.

இந்த மாதிரிலாம் ஷார்ட்ஸ் ஆடி. ஷார்ட்ஸ விடுங்க. 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும்.

கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து 'ஒதலவா' அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன்.

அப்போ ஒரு பால்ல ரெண்டு ரன்னு தேவை. அப்படி கண்ண வச்சுக்கிட்டு அவர் பேசினாரு. 'இங்க அடி. அங்க அடின்னு'. என்னால என்ன முடியுமோ அத நான் பண்றேன். அப்படின்னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு அந்த பந்த ஆடினேன்" என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதனை சமூக வலைதளத்தில் வீடியோவாக அவர் பதிவு செய்துள்ளார். இதை அவரது குட்டி ஸ்டோரியில் ஒன்றாக அஸ்வின் பகிர்ந்துள்ளார்.




Next Story