1,206 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய விராட் கோலி..!


1,206 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய விராட் கோலி..!
x

Image Courtesy: AFP

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளை இந்தியா 158 ஓவர்கள் ஆடி 5 விக்கெட்டுகளை இழந்து 472 ரன்கள் குவித்துள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இன்னும் 8 ரன்கள் பினதங்கியுள்ளது இந்தியா.

இந்திய இன்ங்சில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். அதைதொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை அடித்தார்.

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சதம் அடித்து அசத்தினார். சுமார் 1,206 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சதத்தை பதிசு செய்துள்ளார். சர்வதேச அரங்கில் விராட் கோலியின் 75வது சதமாக இது பதிவானது.


Next Story