ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.11.45 கோடி...? மறுப்பு தெரிவித்த விராட் கோலி..!


ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.11.45 கோடி...? மறுப்பு தெரிவித்த விராட் கோலி..!
x

Credit : Instagram@virat.kohli

தினத்தந்தி 12 Aug 2023 1:28 PM IST (Updated: 12 Aug 2023 1:47 PM IST)
t-max-icont-min-icon

விராட் கோலி தனது சமூக ஊடக வருமானம் குறித்து சுற்றி வரும் செய்திகள் உண்மையல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இவர், பேட்டிங் மற்றும் களத்தில் ஆக்ரோஷமான செயல்பாடுகளால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். கிரிக்கெட் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார்.

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக நபர்கள் பின் தொடரும் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை 25.6 கோடி நபர்கள் பின் தொடருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இவர் பதிவிடும் ஒரு பதிவிற்கு இந்திய மதிப்பில் ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விராட் கோலி, எனது சமூக ஊடக வருமானம் குறித்து வரும் செய்திகள் உண்மையல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருக்கும் அதே வேளையில், எனது சமூக ஊடக வருமானம் குறித்து வெளிவரும் செய்திகள் உண்மையல்ல." இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.



Next Story