விராட் கோலி, ரோகித் சர்மா எதிர்காலம் - கபில்தேவ் கருத்து


விராட் கோலி, ரோகித் சர்மா எதிர்காலம் - கபில்தேவ் கருத்து
x

Image Courtesy: @T20WorldCup

விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரர்கள் விராட் கோலி (வயது 35) மற்றும் ரோகித் சர்மா (37). சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடருன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் மற்றும் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

அதேசமயம் இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் கூறினர். விராட் கோலி நல்ல பிட்னஸ் கடை பிடிப்பதால் 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மறுபுறம் கொஞ்சம் சுமாரான பிட்னஸை கொண்டுள்ள ரோஹித் சர்மா 37 வயதை கடந்துள்ளார். எனவே அவர் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பொதுவாக 26 - 34 வயதுடன் பெரும்பாலான வீரர்களின் உச்சகட்ட நல்ல காலம் முடித்து விடும் என்றும், அதைத் தாண்டி எந்தளவுக்கு பிட்னஸ் கடை பிடிக்கிறோமோ அந்தளவுக்கு மட்டுமே அசத்த முடியும் என்றும் இந்திய முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.

விராட் கோலி, ரோகித் சர்மா எவ்வளவு காலம் விளையாடுவார்கள் என்பது அவருடைய பிட்னஸ் மற்றும் தனிப்பட்ட வாழ்வியலை பொறுத்தது என்று கபில் தேவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

என்னுடைய கருத்துப்படி 26 முதல் 34 வருடங்கள் உங்களுடைய முதன்மை நாட்களாக இருக்கும். அதன் பின் வீரர்களின் பிட்னஸ் தான் அவர்கள் விளையாடும் காலத்தை தீர்மானிக்கிறது. ரவி சாஸ்திரி தன்னுடைய ஆரம்ப வயதிலேயே ஓய்வு பெற்று விட்டார். மறுபுறம் சச்சின் டெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடினார்.

எனவே, ஓய்வு என்பது தங்களின் சொந்த வாழ்வை பொறுத்து தனிநபர்கள் நிர்ணயிக்க வேண்டிய முடிவாகும். எந்த அளவுக்கு பிட்டாக தொடர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறீர்களோ அந்தளவுக்கு நீண்ட காலம் அசத்தலாக விளையாட முடியும் என்பதே என்னுடைய கருத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story