யுவராஜ் சிங்கின் மகத்தான சாதனையை சமன் செய்த விராட் கோலி


யுவராஜ் சிங்கின் மகத்தான சாதனையை சமன் செய்த விராட் கோலி
x

image courtesy: PTI 

ஐ.சி.சி. யு-19, ஒருநாள், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பைகளை விராட் கோலி கோப்பைகளை வென்றுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மற்ற போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி முக்கியமான இறுதிப்போட்டியில், விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை நங்கூரமாக நிலைத்து நின்று காப்பாற்றினார். அதனால் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்ட நாயகன் விருது வாங்கிய நிகழ்விலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஓய்வை அறிவித்துள்ளார்.

விராட் கோலி ஏற்கனவே ஐ.சி.சி. வெள்ளைப்பந்து தொடர்களான 19- வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களிலும் கோப்பைகளை வென்றுள்ளார். அந்த வரிசையில் தற்போது டி20 உலகக்கோப்பையையும் அவர் வென்றுள்ளார்.

இதன் வாயிலாக அண்டர்-19 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து வகையான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற வீரர் என்ற யுவராஜ் சிங்கின் மகத்தான சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

ஓய்வு பெறுவதற்குள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மட்டும் கைப்பற்றினால் அனைத்து விதமான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே வீரர் என்ற உலக சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story