இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன தெரியுமா..?


இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன தெரியுமா..?
x

Image Courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாய்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த வெற்றிக்கு முன் 59.52 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 64.58 % பெற்று அதே 2வது இடத்தில் நீடிக்கிற்து.

முதல் இடத்தில் (75%) நியூசிலாந்து அணி உள்ளது. இதையடுத்து 3 முதல் 9 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (55%), வங்காளதேசம் (50%), பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), தென் ஆப்பிரிக்கா (25%), இங்கிலாந்து (19.44%), இலங்கை (0%) உள்ளிட்ட அணிகள் உள்ளன.



Next Story