டிஎன்பிஎல்: சரிவில் இருந்து மீண்ட திண்டுக்கல் டிராகன்ஸ்...சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-க்கு 171 ரன்கள் இலக்கு...!


டிஎன்பிஎல்: சரிவில் இருந்து மீண்ட திண்டுக்கல் டிராகன்ஸ்...சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-க்கு 171 ரன்கள் இலக்கு...!
x

Image Courtesy: @TNPremierLeague

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் ஆதித்ய கணேஷ் 44 ரன்கள் எடுத்தார்.

திண்டுக்கல்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். இந்நிலையில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல்; டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசின் வென்ற சூப்பர் கில்லீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ராகுல் 20 ரன், ஷிவம் சிங் 21 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய இந்திரஜித் 1 ரன், பூபதி குமார் 7 ரன், கேப்டன் அஷ்வின் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டன் இழந்தனர். இதனால் திண்டுக்கல் அணி 63 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஆதித்ய கணேஷ், சரத் குமார் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்ய கணேஷ் 44 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனாட். தொடர்ந்து சுபோத் போடி களம் இறங்கினார். இறுதியில் திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் ராஹில் ஷா 3 விக்கெட்டும், ரோகித் 2 விக்கெட்டும், ஹரிஷ் குமார், லோகேஷ் ராஜ், சிலம்பரசன், அபராஜித் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி ஆட உள்ளது.


Next Story