நான் உட்கார்ந்தால் எழுந்து நின்றால் கூட கிண்டலடித்தார்கள் - கே.எல்.ராகுல் வேதனை


நான் உட்கார்ந்தால் எழுந்து நின்றால் கூட கிண்டலடித்தார்கள் - கே.எல்.ராகுல் வேதனை
x

image courtesy: PTI

சமூக வலைதளங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து சமீபத்திய பேட்டியில் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் தற்போது துலீப் கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறார். இந்திய அணிக்கு அறிமுகம் ஆன ஆரம்ப காலங்களில் சிறப்பாக விளையாடி அணியின் துணை கேப்டனாக முன்னேறினார்.

ஆனால் சமீப காலங்களில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் அணியின் தோல்விகளுக்கு காரணமாகி வருகிறார். இதனால் தற்போது 3 வகையான இந்திய அணியிலும் கே.எல். ராகுலுக்கு நிலையான இடம் பறிபோயுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறும் அளவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தம்மை கிண்டலடித்ததாக கே.எல். ராகுல் வேதனை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

ஆரம்ப காலங்களில் நான் கிண்டல்களுக்கு கவலைப்படாமல் அதை நன்றாக கையாள்வேன். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நான் அதிகமான கிண்டல்களுக்கு உள்ளானேன். நான் உட்கார்ந்தால் எழுந்து நின்றால் கூட கிண்டலடித்தார்கள். தற்போது கிண்டல்களால் நான் முடிந்து போயுள்ளேன். அதனால் கடந்த ஒன்றரை வருடங்களில் நான் இன்ஸ்டாகிராமுக்கு அதிகம் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் எனக்கு தேவையான விஷயங்களை போட்டுவிட்டு உடனடியாக வெளியேறி விடுவேன்" என்று கூறினார்.


Next Story