தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவரை விட சிறந்தவர் இல்லை - டிம் சவுதி புகழாரம்


தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவரை விட சிறந்தவர் இல்லை - டிம் சவுதி புகழாரம்
x

காயத்திலிருந்து குணமடைந்த பின்பு பும்ரா மேலும் சிறப்பாக செயல்படுவதாக டிம் சவுதி தெரிவித்துள்ளார்.

வெலிங்டன்,

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அதனால் அவரை வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான் வீரர்கள் பாராட்டினர்.

இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த பின்பு பும்ரா மேலும் சிறப்பாக செயல்படுவதாக நட்சத்திர நியூசிலாந்து வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார். அத்துடன் தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஜஸ்பிரித் பும்ராவை விட வேறு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் மிகப்பெரிய காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த பின் அவர் முன்பிருந்ததை விட தற்போது சிறப்பாக செயல்படுகிறார். அவரால் காயத்தை எளிதாக சமாளிக்க முடிந்ததாக தெரிகிறது. தற்போது அதிகமாக அனுபவங்களை பெற்றுள்ள அவர் தன்னுடைய ஆட்டத்தை நன்றாக புரிந்து கொண்டுள்ளார். தற்போது 3 வகையான கிரிக்கெட்டிலும் நாம் பும்ராவின் சிறந்த வெர்ஷனை பார்க்கிறோம். அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் தற்சமயத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதில் அவரை விட சிறந்தவர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை" எனக் கூறினார்.


Next Story