ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் நிறைவு விழா
இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அகமதாபாத்,
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அது மட்டுமின்றி இந்த போட்டியில் இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.