பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
x

image courtesy: AFP

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 7-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜாக் லீச், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன் , கிறிஸ் வோக்ஸ்.


Next Story