டெஸ்ட் கிரிக்கெட்: குமார் சங்கக்கராவின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜோ ரூட்


டெஸ்ட் கிரிக்கெட்: குமார் சங்கக்கராவின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜோ ரூட்
x

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஜோ ரூட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

லண்டன்,

இங்கிலாந்து - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 325 ரன்களும், இலங்கை 263 ரன்களும் அடித்தன.

இதனையடுத்து 62 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தற்போது வரை இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

முன்னதாக ஜோ ரூட் இந்த ஆட்டத்தில் அடித்த 12 ரன்கள் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 12402 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த குமார் சங்கக்கராவின் (12400 ரன்கள்) வாழ்நாள் சாதனையை தகர்த்த அவர் 6-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சச்சின் டெண்டுல்கர் - 15921 ரன்கள்

2.ரிக்கி பாண்டிங் - 13378 ரன்கள்

3.ஜாக் காலிஸ் -13289 ரன்கள்

4.ராகுல் டிராவிட் - 13288 ரன்கள்

5. அலஸ்டர் குக் - 12472 ரன்கள்

6. ஜோ ரூட் - 12402 ரன்கள்

7. குமார் சங்கக்கரா - 12400 ரன்கள்


Next Story