லைவ் அப்டேட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் குவிப்பு
டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது
Live Updates
- 7 Jun 2023 4:14 PM IST
இந்த போட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் 50 -வது டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 9 சதம் 1 இரட்டை சதம் உள்பட 3379 ரன்கள் அடித்துள்ளார்.
- 7 Jun 2023 3:39 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்; ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டையுடன் விளையாடுவதாக தகவல்
- 7 Jun 2023 3:38 PM IST
முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி
சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார் உஸ்மான் கவாஜா
- 7 Jun 2023 3:21 PM IST
ஆஸ்திரேலிய அணியின் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
- 7 Jun 2023 3:11 PM IST
போட்டிக்கான இரு அணி:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத் , ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ் , முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலன்ட்.