இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட்
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்துள்ளது.
கொழும்பு,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஹ்மத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 62.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்துள்ளது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணாரத்னே 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.