டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அச்சுறுத்த கூடியதாக இல்லை - முன்னாள் இங்.வீரர் விமர்சனம்


டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அச்சுறுத்த கூடியதாக இல்லை - முன்னாள் இங்.வீரர் விமர்சனம்
x

டி20 உலகக்கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலமானதாக இல்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிடு விமர்சித்துள்ளார்.

லண்டன்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலமானதாக இல்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிடு விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

தற்போதைய இந்திய அணி கணிக்கக்கூடிய ஒரு அணியாக இருக்கிறது. அதோடு இந்த அணியை வைத்துக்கொண்டு எதிரணியினர் அவர்களை பலமான அணி என்று நினைக்க முடியாது. இந்திய அணி அச்சுறுத்த கூடியதாக இல்லை. இந்திய அணியில் உள்ள தரம் தற்போது சற்று குறைவாக இருப்பதாக நினைக்கிறேன். இந்திய அணியில் தற்போது இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் தரமான வீரர்கள்தான் ஆனால் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் ரிஸ்க் எடுக்க யாருமே தயாராக இல்லை. அவர்களால் எதிரணிக்கு அச்சுறுத்தலை தர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story