டி20 உலகக்கோப்பை; வங்காளதேச வீரருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி - காரணம் என்ன..?


டி20 உலகக்கோப்பை; வங்காளதேச வீரருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி - காரணம் என்ன..?
x

Image Courtesy: AFP

வங்காளதேச அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேபாளத்தை எதிர்கொண்டது.

செயிண்ட் வின்செண்ட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் இந்திய நேரப்படி கடந்த 17ம் தேதி அதிகாலை 5 மணிக்கு செயிண்ட் வின்செண்டில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - நேபாளம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வங்காளதேச வீரர் தன்சிம் ஹசன் சகிப் ஐ.சி.சி விதிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு 1 டிமெரிட் புள்ளியும், போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நேபாள இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் தன்சிம் ஒரு பந்து வீசிய பிறகு, அவர் பேட்ஸ்மேன் ரோகித் பவுடலை ஆக்ரோஷமான முறையில் அணுகி பொருத்தமற்ற உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தினார் என்ற குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story