டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: விராட் கோலி இத்தனை ரன்கள் அடிப்பார் - மான்டி பனேசர்


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: விராட் கோலி இத்தனை ரன்கள் அடிப்பார் - மான்டி பனேசர்
x

Image Courtesy: AFP

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

பார்படாஸ்,

20 அணிகள் கலந்து கொண்ட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி ஆட்டங்களில் முறையே தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

பார்படாஸில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வரும் விராட் கோலி நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் 100 ரன்கள் அடிப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும். இந்த ஆட்டத்தில் விராட் கோலி 100 ரன்கள் அடிப்பார் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story