டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரம் அறிவிப்பு


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரம் அறிவிப்பு
x

Image Courtesy: @ICC

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

பார்படாஸ்,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின.

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான நடுவர்கள் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆட்டத்திற்கான நடுவராக (ரெப்ரீ) ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்) செயல்பட உள்ளார்.

இதையடுத்து கள நடுவர்களாக கிறிஸ்டோபர் கேப்னி (நியூசிலாந்து) மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) ஆகியோரும், டிவி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பரோவும் (இங்கிலாந்து), 4வது நடுவராக ரோட்னி டக்கரும் (ஆஸ்திரேலியா) செயல்பட உள்ளனர்.

இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரம்:

இந்தியா - தென் ஆப்பிரிக்கா

நடுவர் (ரெப்ரீ) : ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்)

கள நடுவர்கள்: கிறிஸ்டோபர் கேப்பேனி (நியூசிலாந்து) மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து)

டிவி நடுவர்: ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து)

நான்காவது நடுவர்: ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா)


Next Story