டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி


டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
x

Image Courtesy: AFP

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

செயிண்ட் லூசியா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடர் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயிண்ட் லூசியாவில் இன்று நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 68 ரன், ஸ்டாய்னிஸ் 59 ரன் எடுத்தனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையிலும், ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையிலும் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதால் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஸ்காட்லாந்து தோல்வி கண்டதால் தொடரில் இருந்து வெளியேறியது.


Next Story