டி20 உலகக்கோப்பை: முன்னணி வீரர் விலகல்...வங்காளதேச அணிக்கு பின்னடைவு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
டாக்கா,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க உள்ள வங்காளதேச அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காயத்தினால் அவதிப்பட்டு வரும் அவர் இன்னும் முழுமையாக அதிலிருந்து குணமடையவில்லை.
அதனால் அவர் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவரது விலகல் வங்காளதேச அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story