ஐநாக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு - ஒப்பந்தம் கையெழுத்து


ஐநாக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு - ஒப்பந்தம் கையெழுத்து
x

இந்திய அணி விளையாடும் போட்டிகள், ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள், ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்சதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story