முத்தரப்பு டி20 தொடர்: வங்காளதேசத்திற்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்


முத்தரப்பு டி20 தொடர்: வங்காளதேசத்திற்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
x

Image Courtesy: AFP 

வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் முகமது ரிஸ்வான 50 பந்துகளில் 78 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

கிறிஸ்ட்சர்ச்,

முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்

இந்நிலையில் இன்று தொடங்கிய இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. தன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் ஆசம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர்.

அருமையாக தொடங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். பொறுமையாக ஆடிய கேப்டன் பாபர் ஆசம் 22 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து ரிஸ்வானுடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. அதிரடியாக ஆடிய ஷான் மசூத் 22 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஹைதர் அலி 6 ரன்னுக்கும், இப்டிகார் அகமது 13 ரன்னுக்கும், ஆசிப் அலி 4 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 78 ரன்கள் குவித்தார். நவாஸ் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். வங்காளதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 2 விக்கெட்டும், ஹசன், நசும் அகமது, மெகதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி ஆட உள்ளது.


Next Story