பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; புது கேப்டன் தலைமையில் களம் இறங்கும் நியூசிலாந்து


பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; புது கேப்டன் தலைமையில் களம் இறங்கும் நியூசிலாந்து
x

Image Courtesy: @ICC

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து முன்னணி வீரர்களான வில்லியம்சன், சாண்ட்னெர், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் ஆடி வருகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி புதிய கேப்டன் தலைமையில் களம் இறங்குகிறது.

நியூசிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் அனுபவ வீரர்களான இஷ் சோதி, டிம் செய்பர்ட், பின் ஆலென் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்;

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), பின் ஆலென், மார்க் சாம்ப்மென், ஜோஷ் க்ளார்க்சென், ஜேக்கப் டக்ப்பி, டீன் பாக்ஸ்க்ராப்ட், பென் லிஸ்டர், கோல் மெக்கன்சி, ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், வில் ஓ ரூர்க், டிம் ராபின்சன், பென் சீயர்ஸ், டிம் செய்பர்ட், இஷ் சோதி.

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான டி20 அட்டவணை விவரம்;

முதல் டி20 போட்டி - ஏப்ரல் 18 - ராவல்பிண்டி

2வது டி20 போட்டி - ஏப்ரல் 20 - ராவல்பிண்டி

3வது டி20 போட்டி - ஏப்ரல் 21 - ராவல்பிண்டி

4வது டி20 போட்டி - ஏப்ரல் 25 - லாகூர்

5வது டி20 போட்டி - ஏப்ரல் 27 - லாகூர்



Next Story