சூப்பர் 12 சுற்று: தென் ஆப்பிரிக்காவுக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னி,
டி20 உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் 6 ரன்னிலும், ரிஸ்வான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.. அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 28 ரன்களுக்கு அவுட்டானார்.
ரன் குவிக்க தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியை இப்திகார்- ஷதாப் கான் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இப்திகார் அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடி காட்டிய ஷதாப் கான் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 22 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்க்கியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது.